விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் வேளாண் கருவிகள்

கொள்ளிடம் பகுதியில் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் வேளாண் கருவிகள் வழங்கப்படுகிறது என ேவளாண்மை உதவி இயக்குனர் எழில்ராஜா தெரிவித்தார்.

Update: 2023-02-11 18:45 GMT

கொள்ளிடம்:

கொள்ளிடம் பகுதியில் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் வேளாண் கருவிகள் வழங்கப்படுகிறது என ேவளாண்மை உதவி இயக்குனர் எழில்ராஜா தெரிவித்தார்.

இதுகுறித்து கொள்ளிடம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் எழில்ராஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

50 சதவீத மானியத்தில் வேளாண் கருவிகள்

கொள்ளிடம் வட்டாரத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையின் மூலம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கொள்ளிடம் வட்டாரத்தில் கோபாலசமுத்திரம், மாதிரவேளூர், புத்தூர், வடகால், திருக்கருகாவூர், கடவாசல் ஆகிய 11 கிராம பஞ்சாயத்துகளில் இந்த சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள கிராம பஞ்சாயத்து ஒன்றிற்கு 300 குடும்பங்களுக்கு தலா 2 தென்னை மர கன்றுகள் இலவசமாக வழங்கப்படுகிறது.

50 சதவீத மானியத்தில் கடப்பாரை, மண்வெட்டி, களை கொத்தி, கதிர் அரிவாள், இரும்பு சட்டி உள்ளிட்ட வேளாண் கருவிகள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படுகிறது.

நன்கு பயன்படுத்தி ெகாள்ள வேண்டும்

தோட்டக்கலை துறையின் மூலம் 8 வகையான பழ மரக்கன்றுகள், 8 வகையான காய்கறி விதை தொகுப்புகள், இயற்கை வளர்ச்சி ஊக்கி உற்பத்தி செய்ய பிளாஸ்டிக் ட்ரம், அறுவடை செய்த காய்கறிகளை சந்தைக்கு எடுத்துச் செல்ல பிளாஸ்டிக் கூடை, காய்கறி சாகுபடி உற்பத்தி செய்ய எக்டேருக்கு ரூ. 10 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது. மேலும் வேளாண் பொறியியல் துறை மூலம் பண்ணை குட்டைகள் அமைத்து தருதல், சி மற்றும் டி பிரிவை சார்ந்த பாசன வாய்க்கால்களை தூர்வாருதல், பஞ்சாயத்து குளங்களை தூர்வாருதல் மற்றும் இதர திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே விவசாயிகள் இந்த திட்டங்களை நன்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்