வேளாண் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி

மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள பருத்திப்பாடு ஊராட்சியில் உழவர் உற்பத்தியாளர் குழுவிற்கு வேளாண் உபகரணங்கள் வழங்கப்பட்டது.

Update: 2022-12-01 19:48 GMT

இட்டமொழி:

நாங்குநேரி யூனியன் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள பருத்திப்பாடு ஊராட்சியில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட உழவர் உற்பத்தியாளர் குழுவிற்கு வேளாண் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் வாழைநார் மதிப்பு கூட்டு சமுதாய பண்ணை பள்ளி தொடக்க விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

பருத்திப்பாடு பஞ்சாயத்து தலைவர் ஊசிக்காட்டான் முன்னிலை வகித்தார். தி.மு.க. நாங்குநேரி கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.ஆரோக்கிய எட்வின் தலைமை தாங்கி, வேளாண் உபகரணங்களை வழங்கினார். மேலும் சமுதாய பண்ணை பள்ளியையும் தொடங்கி வைத்து பயிற்சி உபகரணங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் வாழ்ந்துகாட்டுவோம் திட்ட மாவட்ட செயல் அலுவலர் ராம்லால், வட்டார அணித்தலைவர் விசுவாசராஜ், திட்ட செயலர் வீரப்பா, பாண்டிசெல்வம் மற்றும் விவசாய குழுவினர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்