வேளாண் வளர்ச்சி திட்ட செயலாக்க கூட்டம்

சாத்தான்குளம் ஒன்றியம் புதுக்குளத்தில் வேளாண் வளர்ச்சி திட்ட செயலாக்க கூட்டம் நடந்தது.

Update: 2023-01-21 18:45 GMT

தட்டார்மடம்:

சாத்தான்குளம் ஒன்றியம் புதுக்குளத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட செயலாக்கக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு புதுக்குளம் பஞ்சாயத்து தலைவர் பாலமேனன் தலைமை தாங்கினார். தோட்டக்கலை உதவி இயக்குனர் ஜெபத்துரை, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் கிளாட்வின் இஸ்ரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் விவசாயிகளின் குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு அனைத்து துறை அலுவலர்கள் திட்டம் தொடர்பாக பேசினர். இதில் சாத்தான்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் செயலர் எட்வின் தேவ ஆசீர்வாதம், கால்நடை உதவி மருத்துவர் சவுந்தர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பட்டத்தி, வருவாய் ஆய்வாளர் பாலகங்காதரன், மகளிர் திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்டல் ஜெபா, வேளாண்மை உதவி பொறியாளர் விக்னேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஜெயக்குமார் சாமுவேல் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்