வேளாண் வளர்ச்சி திட்ட முகாம்
செங்கோட்டை அருகே வேளாண் வளர்ச்சி திட்ட முகாம் நடந்தது
செங்கோட்டை:
தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டாரம் கிளாங்காடு கிராமம், வேளாண்மை உழவர் நல துறையால் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதையொட்டி ஆய்க்குடி முதல் கிளாங்காடு மெயின் ரோட்டில் இருபுறமும் விவசாயிகள் தீவிரமாக திருந்திய நெல் சாகுபடி செய்து வருகின்றனர். அவ்வாறு நெல் சாகுபடி செய்யப்படும் திடல்களில் வரப்புகளில் உளுந்து சாகுபடிக்காக தமிழக அரசு வேளாண்மை உழவர் நலத்துறை சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளது.
இத்திட்டத்தில் உளுந்து 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தினை கிளாங்காடு பகுதியில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் தமிழ்மலர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். கிளாங்காடு ஊராட்சி மன்ற தலைவர் சந்திரசேகர், துணைத்தலைவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். செங்கோட்டை வட்டார துணை வேளாண்மை அலுவலர் சேக் முகைதீன் வரவேற்றார்.
முகாமில் கலெக்டரின் நேர்முக உதவி உதவியாளர் (பொறுப்பு) கனகம்மாள் திட்ட விளக்க உரையாற்றினார். வேளாண் அறிவியல் மைய விஞ்ஞானி சுகுமாரன், வரப்பில் பயறு ஊன்றுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி விளக்கி கூறினார். வேளாண் விஞ்ஞானி சுகுமார் மற்றும் ராஜேந்திர கணேசன் தொழில்நுட்ப உரையாற்றினர்.
இதையொட்டி நடந்த பேரணியில் ஆய்க்குடி சுப்பிரமணியபுரம் அரசு தொடக்கப்பள்ளி மாணவ-மாணவிகள், தலைமை ஆசிரியை கற்பகவல்லி தலைமையில் கலந்து கொண்டனர்