வேளாண்மைத்துறை மூலம் மானியத் திட்டங்கள்

வேளாண்மைத்துறை மூலம் மானியத் திட்டங்கள்

Update: 2023-02-11 10:22 GMT

போடிப்பட்டி

மடத்துக்குளம் வட்டாரத்தில் வேளாண்மைதுறை மூலம் மானிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

காண்டாமிருக வண்டு

மடத்துக்குளம் வட்டாரத்தில் நடப்பு 2022-23 ம் நிதியாண்டில் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம், மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டம், சொட்டுநீர் பாசனத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மானியத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஜிப்சம் ஏக்கருக்கு 200 கிலோ மானிய விலையில் வழங்கப்படுகிறது.முழு விலையான ரூ. 651 ல் மானியம் ரூ.250 கழித்து விவசாயிகள் பங்குத் தொகை ரூ 401 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.துத்தநாக சல்பேட் ஏக்கருக்கு 10 கிலோ வீதம் ரூ. 250 மானிய விலையில் வழங்கப்படுகிறது.

இதற்கு விவசாயிகள் பங்கு தொகை ரூ. 411 மட்டும் செலுத்தினால் போதுமானது. மேலும் பண்ணை கருவிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஒரு மண் வெட்டி, ஒரு கடப்பாறை, 2 கதிர் அரிவாள், ஒரு இரும்புச் சட்டி, ஒரு களைக்கொத்து ஆகியவை அடங்கிய வேளாண்மை பண்ணைக் கருவிகள் தொகுப்பு 50சதவீதம் மானியத்தில் விவசாயிகள் பங்குத் தொகை ரூ.1532 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.மேலும் தென்னையைத் தாக்கும் காண்டா மிருக வண்டுகளைக் கட்டுப்படுத்தும் இனக்கவர்ச்சிப் பொறிகள் ஏக்கருக்கு 2 எண்களும், உயிரி பூஞ்சாணமான மெட்டாரைசியம் ஏக்கருக்கு 4 கிலோ அளவில் 50% மானிய விலையில் வழங்கப்படுகிறது.

உணவு மற்றும் ஊட்டச்சத்து

இந்த திட்டத்தின் கீழ் அனைத்துப் பயிர்களுக்கும் பூச்சி, நோய் தாக்குதலைக் கட்டுபடுத்த இயற்கை எதிரிகளான டிரைக்கோடெர்மா விரிடி ஏக்கருக்கு 2 கிலோ மற்றும் சூடோமோனஸ் ஏக்கருக்கு 1 கிலோ என்ற அளவில் 50 சதவீத மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.நடப்பு நிதியாண்டில் வேளாண்மைத் துறையில் கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும்

வேடப்பட்டி, கடத்தூர், சோழமாதேவி, மைவாடி ஆகிய கிராமங்களில் அனைத்து திட்டங்களிலும் 80 சதவீத அளவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.மேற்கண்ட கிராமங்களில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.எனவே மடத்துக்குளம் வட்டார அனைத்து கிராம விவசாயிகளும் மடத்துக்குளம் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள அனைத்து இடுபொருட்களையும் மானிய விலையில் பெற்று பயனடையுமாறு வேளாண்மை உதவி இயக்குநர் கேட்டுக் கொண்டுள்ளார்.

-

Tags:    

மேலும் செய்திகள்