பெற்றோர் செல்போன் தர மறுத்ததால் வேதனை: பிளஸ்-2 மாணவி தற்கொலை

பெற்றோர் செல்போன் தர மறுத்ததால் வேதனை அடைந்த பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்டார்

Update: 2022-10-19 20:12 GMT

திருமங்கலம்,

திருமங்கலம் குதிரைசாரிகுளத்தை சேர்ந்தவர் தில்லையப்பன். இவரது மகள் முத்துபிரியா (வயது 18). திருமங்கலத்தில் உள்ள அரசுபெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். செல்போன் வைத்திருந்தார். மாணவி அடிக்கடி செல்போனை பயன்படுத்தி வந்ததால் படிப்பில் நாட்டம் குறைந்துள்ளது. இதனால் பெற்றோர் கண்டித்து அவரிடமிருந்து செல்போனை வாங்கி வைத்து கொண்டனர். செல்போன் கேட்டு கடந்த 2 நாட்களாக மாணவி முத்துபிரியா வீட்டில் சண்டையிட்டு கோபித்து கொண்டு சாப்பிட மறுத்துள்ளார். பெற்றோர் தரமறுத்ததால் மனவிரக்தியடைந்த மாணவி நேற்று இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். திருமங்கலம் டவுன் போலீசார் உடலை மீட்டு அரசுமருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்