பழங்குடி இன மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்காவிட்டால் போராட்டம்

பழங்குடி இன மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்காவிட்டால் போராட்டம் நடத்துவது என மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2023-07-26 19:24 GMT

தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம் சார்பில் இளையபெருமாள் நல்லூர் இருளர் இன மக்கள் வாழ்ந்த 4.75 ஏக்கர் நிலப்பரப்பை அவர்களுக்கே மனைபட்டா வழங்கக்கோரி மாவட்ட மாநாடு அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் நடைபெற்றது. மாநாட்டிற்கு ஒருங்கிணைப்பாளர் நாகராஜ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு கோவில் மனை குடியிருப்போர் சங்க மாநில பொருளாளர் ஏழுமலை சிறப்புரையாற்றினார். மாநாட்டில் சாதி சான்று, கல்வி கடன், தொழில் கடன் வழங்க வேண்டும். பழங்குடி இன மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்காவிட்டால் ஆகஸ்டு மாதம் 21-ந் தேதி ஜெயங்கொண்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களை திரட்டி மறியல் போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக ஜெயங்கொண்டம் அண்ணா சிலையில் இருந்து முக்கிய வீதி வழியாக 100-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்றனர். இதையடுத்து தமிழ்நாடு பழங்குடியின மக்கள் சங்க தலைவராக கனகராஜ், துணை தலைவராக கவிதா, கவுரவ தலைவராக இரைகோ என்கிற ராஜேந்திரன் மற்றும் 25 பேர் கொண்ட மாவட்ட குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்