விவசாய தொழிலாளர் சங்கத்தினர் போராட்டம்

கீரனூரில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-07-25 19:45 GMT

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பேரூராட்சிகளிலும் 100 நாள் வேலை உறுதி திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி மனுகொடுக்கும் போராட்டம் நேற்று நடந்தது. அதன்படி பழனி அருகே கீரனூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு மனு ெகாடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு ஒன்றிய குழு உறுப்பினர் முகமது இஸ்மாயில் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அருள்செல்வன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். ஒன்றிய செயலாளர்கள் பழனிசாமி, ஆறுமுகம், முருகேசன், துக்கையண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர். போராட்ட முடிவில் பேரூராட்சி அலுவலகத்தில் அவர்கள் கோரிக்கை மனுவை கொடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்