கம்பத்தில் பரபரப்பு:பா.ஜ.க. நிா்வாகி மோட்டார்சைக்கிள் தீ வைத்து எரிப்பு

கம்பத்தில் பா.ஜ.க. நிர்வாகியின் மோட்டார்சைக்கிளை தீ வைத்து எரித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2023-07-14 18:45 GMT

கம்பம் பாரதியார் நகர் தெற்கு 4-வது தெருவை சேர்ந்தவர் வித்யாபதி (வயது 30). இவர், தனியார் மோட்டார்சைக்கிள் விற்பனை நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிகிறார். மேலும் கம்பம் நகர பா.ஜ.க. இளைஞரணி நிர்வாகியாகவும் உள்ளார். கடந்த 12-ந்தேதி இரவு வழக்கம்போல் இவர், வேலைக்கு சென்றுவிட்டு வந்து மோட்டார்சைக்கிளை தனது வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலையில் மோட்டார்சைக்கிள் திடீரென தீப்பற்றி எரிந்தது.

இதையடுத்து வீட்டில் இருந்தவர்கள் வெளியே வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அதற்குள் மோட்டார்சைக்கிள் முற்றிலும் எரிந்து நாசமானது. இதுகுறித்து கம்பம் தெற்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார்சைக்கிளை தீ வைத்து எரித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்