இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-04-24 19:41 GMT

தஞ்சையில் உள்ள தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் நேற்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார். விழாவில் பட்டம் பெற வந்த இந்திய மாணவர் சங்க மாநில தலைவர் அரவிந்த்சாமியை நேற்று போலீசார் கைது செய்தனர். இதனை கண்டித்தும் அரவிந்த்சாமியை உடனடியாக போலீசார் விடுவிக்க வலியுறுத்தியும் கும்பகோணத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் அருகே இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தஞ்சை மாவட்டக்குழு உறுப்பினர் ராகுல் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட துணை செயலாளர் பிரதீப் கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். முடிவில் செயற்குழு உறுப்பினர் கீர்த்தி வாசன் நன்றி கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்