சாதி ஆணவக் கொலைகளை தடுக்க தனி சட்டம் நிறைவேற்றக்கோரி ஆர்ப்பாட்டம்
சாதி ஆணவக் கொலைகளை தடுக்க தனி சட்டம் நிறைவேற்றக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழகத்தில் சாதி ஆணவக் கொலைகளை தடுக்க தனி சட்டம் நிறைவேற்றக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மேகநாதன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நகர தலைவர் விஜய், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் அறிவழகன் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இதில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் சண்முகம், மாவட்ட செயலாளர் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் நிர்வாகிகள் துரைராஜ், மாரியப்பன், இளங்கோவன், ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட குழு உறுப்பினர் ஞானப்பிரகாசம் நன்றி கூறினார்.