மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் கடையை திறக்கக்கோரி மதுப்பிரியர்கள் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு

நன்னிலம் அருகே மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மதுக்கடையை திறக்கக்கோரி மதுப்பிரியர்கள் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-11-10 19:00 GMT

நன்னிலம் அருகே மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மதுக்கடையை திறக்கக்கோரி மதுப்பிரியர்கள் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுக்கடை திறக்க முடிவு

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே ஆணைக்குப்பம்-மூங்கில்குடி இடையே இணைப்பு சாலை உள்ளது. இந்த சாலையில் ஆணைக்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட இடத்தில் டாஸ்மாக் மதுபான கடை திறக்க முடிவு செய்யப்பட்டு அரசு சார்பில் ஏற்பாடு செய்து தனியார் இடத்தில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. இந்த பணி கடந்த 6 மாதங்களாக நடந்து வந்தது. இந்த நிலையில் மூங்கில்குடி, குவளைக்கால், ஆணைக்குப்பம், மூலங்குடி, தட்டாத்தி மூலை ஆகிய ஊராட்சி பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் அங்கு டாஸ்மாக் மதுக்கடை திறக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக 5 ஊராட்சி மன்ற தலைவர்கள், டாஸ்மாக் கடை வேண்டாம் என தீர்மானம் போட்டு திருவாரூர் மாவட்ட கலெக்டருக்கு மனு அளித்துள்ளனர்.

ஆர்ப்பாட்டம்

இந்த நிலையில் நேற்று அங்கு மதுக்கடை திறக்கப்போவதாக தகவல் கிடைத்ததை அடுத்து மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த மாவட்ட அமைப்பாளர் சண்முகசுந்தரம் தலைமையில் தி.மு.க. ஒன்றிய துணை செயலாளர் குமரேசன், ஊராட்சி மன்ற தலைவர்கள் கார்த்திகேயன் (மூங்கில்குடி), வேலு(மூலங்குடி) மற்றும் ஆணைக்குப்பம் கிராம பொதுமக்கள் மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதே நேரத்தில் மதுக்கடையை திறக்க வேண்டும் என மதுப்பிரியர்கள் அங்கு கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நன்னிலம் அருகே மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மதுக்கடையை திறக்கக்கோரி மதுப்பிரியர்கள் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த நன்னிலம் தாசில்தார் ஜெகதீசன் அங்கு சென்று மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது. ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து அங்கு நன்னிலம் துணை போலீஸ் சூப்பிரண்டு இலக்கியா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்