அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஊதிய உயர்வு வழங்கக்கோரி அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-10-10 19:48 GMT

ஊதிய உயர்வு வழங்கக்கோரி அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கும்பகோணத்தில் அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் கூட்டமைப்பு கும்பகோணம் கிளை ஒருங்கிணைப்பாளர் அய்யப்பன் தலைமை தாங்கினார்.

கவுரவ விரிவுரையாளர்கள் சுதா, முத்துவேல், மணிகண்டன், ஜெனகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சட்டக்கல்லூரிகளில் ரூ.30 ஆயிரம் ஊதியம் வழங்குவதுபோல் கவுரவ விரிவுரையாளர்களுக்கும் ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.

தகுதி தேர்வு

அரசாணை எண் 56-ஐ பின்பற்றி கவுரவ விரிவுரையாளர்களுக்கு உடனடியாக பணி நியமனம் வழங்கவேண்டும். கல்லூரி ஆசிரியர் பணி நியமனத்தில் பணி அனுபவ நேர்க்காணல் முறையை பின்பற்ற வேண்டும். எழுத்து தேர்வு முறையை கைவிட வேண்டும். மாநில தகுதி தேர்வை உடனடியாக நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. கும்பகோணத்தில் உள்ள அரசு பெண்கள் கல்லூரி மற்றும் ஆண்கள் கல்லூரி ஆகிய 2 இடங்களிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்