திருவாரூரில், மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருவாரூரில், மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-10-02 18:45 GMT

புதுச்சேரி மின் வாரியத்தை தனியார் மயமாக்குவதை கண்டித்தும், இதற்காக போராடும் மின் வாரிய ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் திருவாரூரில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு பொறியாளர் சங்க திட்ட செயலாளர். தர்பாரணியம் தலைமை தாங்கினார். இதில் அண்ணா தொழிற்சங்க செயலாளர் முருகானந்தம், எம்பிளாயீஸ் பெட்ரேசன் செயலாளர் முருக அருள், ஐக்கிய சங்க செயலாளர் பாஸ்கர், மத்திய சங்க செயலாளர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்