நவீன அரிசி ஆலைகளை தனியாரிடம் ஒப்படைப்பதை கண்டித்து திருவாரூரில் ஆர்ப்பாட்டம்

நவீன அரிசி ஆலைகளை தனியாரிடம் ஒப்படைப்பதை கண்டித்து திருவாரூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2022-08-24 17:44 GMT

நவீன அரிசி ஆலைகளை தனியாரிடமட் ஒப்படைப்பதை கண்டித்து திருவாரூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டம்

பொதுவுடைமை கொள்கைக்கு எதிராகவும் பதவி உயர்வை பாதிக்கும் வகையிலும், நுகர்பொருள் வாணிப கழகத்தை முடக்கும் நோக்கோடு கூட்டுறவு துறையில் இருந்து மண்டல மேலாளர் நிலை பணியிடங்களுக்கு நியமனம் செய்வதை கண்டித்தும், நவீன அரிசி ஆலைகளை தனியாரிடம் ஒப்படைப்பதை கண்டித்தும், டெண்டர் முறையில் சுமை தூக்கும் தொழிலாளர் நியமனத்தை கண்டித்தும் டி.என்.சி.எஸ்.சி. எம்பீளாயீஸ் யூனியன் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி  திருவாரூர் நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு டி.என்.சி.எஸ்.சி. எம்பீளாயீஸ் யூனியன் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கோஷங்கள்

ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல தலைவர் நீலமேகம் தலைமை தாங்கினார். மண்டல செயலாளர் மயில்வாகனன் முன்னிலை வகித்தார். இதில் துணைத்தலைவர்கள் சுரேஷ்குமார், காளிதாஸ், இளையராஜா, கனகசுந்தரம் மற்றும் துணை செயலாளர்கள் கலந்து கொண்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் மண்டல பொருளாளர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்