மூதாட்டி சாவு

மூதாட்டி சாவு

Update: 2022-10-02 11:57 GMT

வெள்ளகோவில்

வெள்ளகோவில் அருகே உள்ள சிவநாதபுரம் பகுதியைச் சேர்ந்த குப்புசாமி மனைவி சாரதாமணி 62, இவர் வெள்ளகோவிலில் உள்ள ஒரு தனியார் பிஸ்கட் கம்பெனியில் வேலை செய்து கொண்டு வருகிறார், இந்நிலையில் நேற்று முன்தினம் 1ம் தேதி சனிக்கிழமை மாலை சிவநாதபுரம் அருகே பால் வாங்குவதற்காக ரோட்டை கடக்க நின்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த பைக் சாரதாமணி மீது மோதி விட்டது,

இதனால் சாரதாமணிக்கு பலத்த அடிபட்டு விட்டது, உடனே அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் சாரதாமணி முன்னரே இறந்து விட்டதாக தெரிவித்தனர்,

இந்த விபத்துக்கு குறித்து வெள்ளகோயில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி, போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அர்ஜுனன் ஆகியோர் பைக்கை ஓட்டி வந்த கரூர் மாவட்டம், பரமத்தி பகுதியைச் சேர்ந்த பழனிசாமி மகன் பிரேம்குமார் 48, என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்