தாமரை குளத்தை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை

நாகூர் அருகே பாலக்காடு கிராமத்தில் தாமரை குளத்தை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரையை அகற்றி தூர்வார வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-05-23 18:45 GMT

நாகூர்:

நாகூர் அருகே பாலக்காடு கிராமத்தில் தாமரை குளத்தை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரையை அகற்றி தூர்வார வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆகாயத்தாமரை

நாகூர் அருகே பாலக்காடு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள வடக்குதெருவில் தாமரைகுளம் உள்ளது. இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இந்த குளத்தை குளிப்பதற்கும், துணி துவைப்பதற்கும் பயன்படுத்தி வந்தனர்.

தற்போது இந்த குளத்தில் கடந்த 3 ஆண்டுகளாக ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. இதனால் குளத்தில் உள்ள தண்ணீர் மாசடைந்து மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த குளத்தில் குளிப்பவர்களுக்கு தோல் நோய் ஏற்படுகிறது.

அகற்ற வேண்டும்

பாலக்காடு கிராம மக்கள் குளிப்பதற்கும், துணி துவைப்பதற்கும் அருகே உள்ள வடகுடி கிராமத்திற்கு செல்லும் நிலை உள்ளது.குளத்தை தூர்வாரி 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதன்காரணமாக வாய்க்காலில் இருந்து வயல்களுக்கு தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பாலக்காடு கிராம மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு ெகாடுத்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அந்த பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.எனவே. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தாமரைகுளத்தை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்