தூத்துக்குடியில் 2 நாட்களுக்கு பிறகு விசைப்படகுகள் கடலுக்கு சென்றன

தூத்துக்குடியில் 2 நாட்களுக்கு பிறகு விசைப்படகுகள் கடலுக்கு சென்றன.

Update: 2023-09-13 18:45 GMT

தூத்துக்குடியில் 2 நாட்களுக்கு பிறகு நேற்று விசைப்படகுகள் கடலுக்கு சென்றன.

விசைப்படகு

தூத்துக்குடியில் வானிலை எச்சரிக்கை மற்றும் தூத்துக்குடியில் 6 விசைப்படகு தொழிலாளர்கள் மீது ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டும். போலீசார் வழக்கை ரத்து செய்ய வேண்டும், வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையை முறையாக மீனவர்களுக்கு அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் கடந்த 2 நாட்களாக கடலுக்கு செல்லவில்லை.

கடலுக்கு சென்றனர்

இதைத் தொடர்ந்து விசைப்படகு தொழிலாளர்களிடம் மீன்வளத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மீனவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மீனவர்கள் கடலுக்கு செல்வதாக அறிவித்து இருந்தனர். அதன்படி 2 நாட்களுக்கு பிறகு நேற்று தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து183 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இதனால் மீண்டும் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் களைகட்டி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்