19 ஆண்டுகளுக்கு பிறகு திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

19 ஆண்டுகளுக்கு பிறகு திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

Update: 2022-12-11 20:50 GMT

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா திருவக்கரையில் பிரசித்திபெற்ற சந்திரமவுலீஸ்வரர், வக்ரகாளியம்மன் கோவில் உள்ளது.

பழமையும், பெருமையும் வாய்ந்த இந்த திருத்தலம் தொண்டை நாட்டிலுள்ள 32 சிவத்தலங்களுள் 30-வது திருத்தலமாகும்.

19 ஆண்டுகளுக்கு பிறகு

பல்வேறு சிறப்புகளை பெற்ற திருவக்கரை கோவிலில் 2003-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 19 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து பல லட்சம் ரூபாய் செலவில் கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இப்பணிகள் நிறைவடைந்த நிலையில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதனை தொடர்ந்து கோவில் வளாகத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

பக்தர்கள் தரிசனம்

விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்கள் வசதிக்காக மரக்காணம், திண்டிவனம் பகுதியில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. ஆன்மிக அமைப்புகள் சார்பில் பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவில் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்