வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
நெல்லையில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
வக்கீல்கள் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும். வக்கீல்களுக்கான சேமநலநிதியை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நேற்று வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு நடத்தினர்.
அதன்படி நெல்லையில் வக்கீல் சங்க தலைவர் ராஜேஸ்வரன் தலைமையில், செயலாளர் காமராஜ் முன்னிலையில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.