வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு

வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

Update: 2023-02-18 20:34 GMT

சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2009-ம் ஆண்டு பிப்ரவரி 19-ந் தேதி போலீசாரால் வக்கீல்கள் தாக்கப்பட்ட தினத்தை ஆண்டுதோறும் வக்கீல்கள் கருப்பு தினமாக அனுசரித்து நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி இந்த ஆண்டு பிப்ரவரி 19-ந் தேதியை முன்னிட்டு, நேற்று தமிழகம் முழுவதும் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி, திருச்சியில் நேற்று கருப்பு பட்டை அணிந்து வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதன் காரணமாக திருச்சி கோர்ட்டு மற்றும் மாவட்ட நீதிமன்றங்கள் அனைத்திலும் வக்கீல்கள் வராததால் கோர்ட்டு பணிகள் பாதிக்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்