திருவாரூர் மாவட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம்- மீனவர் நலத்துறை உதவி இயக்குனர்

வங்கக்கடலில் சூறைக்காற்று வீச வாய்ப்பு உள்ளதால் திருவாரூர் மாவட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் (பொறுப்பு) ஜெயராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2022-12-06 19:00 GMT

வங்கக்கடலில் சூறைக்காற்று வீச வாய்ப்பு உள்ளதால் திருவாரூர் மாவட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் (பொறுப்பு) ஜெயராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது:-

வங்கக்கடலில் சூறைக்காற்று

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று (புதன்கிழமை) மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் சூறைக்காற்று வீசக்கூடும்.

பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து நாளை (வியாழக்கிழமை) மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

கடலுக்கு செல்ல வேண்டாம்

இதேபோல் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்றின் வேகம் படிப்படியாக உயர்ந்து இன்றுயும், நாளையும் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும்.

அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும். எனவே திருவாரூர் மாவட்ட மீனவர்கள் மறு உத்தரவு வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்