நம்ம ஊரு சூப்பரு திட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டம்
திருவாடானை யூனியன் அலுவலகத்தில் நம்ம ஊரு சூப்பரு திட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
திருவாடானை,
திருவாடானை யூனியன் அலுவலகத்தில் நம்ம ஊரு சூப்பரு திட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மண்டல அலுவலர் ரகுவீர கணபதி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேஸ்வரி, ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். அனைவரையும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேசன் வரவேற்றார். கூட்டத்தில் பேசிய மண்டல அலுவலர் ரகு வீர கணபதி, திருவாடானை யூனியனில் நம்ம ஊரு சூப்பரு திட்டம் மே 1 முதல் தொடங்கி ஜூன் 15-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இத்திட்டத்தின் மூலம் குடிநீர் சுத்தம் சுகாதாரம் மற்றும் கழிவு நீர் மேலாண்மை தொடர்பாக கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. மேலும் பொதுமக்களுக்கு மக்கும் குப்பை, மக்கா குப்பை விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் ஒரு நாளைக்கு ஒரு அரசு அலுவலகம் என்ற அளவில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் இதன் மூலம் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துதல் கிராமங்களை சுற்றுச்சூழல் கொண்ட கிராமங்களாக மாற்ற நம்ம ஊரு சூப்பர் திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இதில் வட்டார கல்வி அலுவலர் புல்லாணி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சங்கர், வல்மீகநாதன், கனகராஜ், விஜி, ஜென்சி ராணி மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.