சமத்துவ மக்கள் கட்சி ஆலோசனை கூட்டம்
சமத்துவ மக்கள் கட்சி ஆலோசனை கூட்டம் நடந்தது
காரைக்குடி
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி ஆலோசனை கூட்டம் காரைக்குடி பாரிநகர் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர அவைத்தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சரத்பாலமுருகன் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கி புதிய நிர்வாகிகளுக்கான நியமன கடிதம் மற்றும் உறுப்பினர் அட்டையை வழங்கினார். கூட்டத்தில் காரைக்குடி நகர செயலாளர் முத்துராஜன், மாவட்ட இளைஞரணி செயலாளர் முகமதுஹாரூன், நகர வர்த்தக அணி செயலாளர் செல்வகணேஷ், நகர மாணவரணி செயலாளர் முத்துக்குமார், சாக்கோட்டை ஒன்றிய மாணவரணி செயலாளர் சந்தோஷ் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மேலும் போதை பொருள் தடுப்பது குறித்து கட்சியின் சார்பில் வருகிற 25-ந்தேதி காரைக்குடி அருகே கோவிலூரில் இருந்து விழிப்புணர்வு பேரணி தொடங்கி காரைக்குடி, கோட்டையூர், கண்டனூர் வழியாக புதுவயலில் நிறைவு பெறுகிறது. இந்த விழிப்புணர்வு பேரணியில் ஏராளமானோர் கலந்துகொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட மேலும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.