ஆலோசனை கூட்டம்

சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. ஓ.பன்னீர்செல்வம் பிரிவின் சார்பில் அவசர ஆலோசனை கூட்டம் சிவகங்கையில் நடைபெற்றது.

Update: 2023-04-07 18:45 GMT

சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. ஓ.பன்னீர்செல்வம் பிரிவின் சார்பில் அவசர ஆலோசனை கூட்டம் சிவகங்கையில் மாவட்ட செயலாளர் ஆவின் சேர்மன் அசோகன் தலைமையில் நடைபெற்றது. நகர் செயலாளர் கே.வி.சேகர் வரவேற்றார். கொள்கை பரப்பு செயலாளர் மருதுஅழகுராஜ், மாநில வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் ராமநாதன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சுந்தரபாண்டியன், தொகுதி செயலாளர் நாகராஜ், மாவட்ட மகளிர் அணி செயலாளர் கயல்விழி பாண்டியன், இளைஞர் பாசறை செயலாளர் சரவணன், மாநில மாணவர் அணி துணை செயலாளர் ஆசைதம்பி, மாவட்ட மாணவரணி செயலாளர் மாரிமுத்து, சிவகங்கை ஒன்றிய செயலாளர்கள் முத்துப்பாண்டியன், ராஜா, சேகர், முருகேசன், காளையார்கோவில் ஒன்றிய செயலாளர் மனோகரன், செல்ல பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் கொள்கை பரப்பு செயலாளர் மருது அழகுராஜ் கூறியதாவது:- திருச்சியில் நடைபெற உள்ள முப்பெரும் விழா மாநாட்டில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொள்ள உள்ளனர். எடப்பாடி பழனிசாமி தன்னை பொதுச்செயலாளர் என்று பொய்யான தோற்றத்தை ஏற்படுத்துகிறார். அவர் தொண்டர்களால் தேர்வு செய்யப்பட்டவர் அல்ல. எடப்பாடி பழனிசாமி அரசியலை பா.ஜ.க. அங்கீகரிக்கக்கூடாது என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்