நீலகிரி மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம், ஊட்டியில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதற்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார். இதில் போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் மற்றும் மாவட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்ஷினி உள்பட பலர் கலந்து கொண்டனர்.