தமிழக மக்கள் முன்னேற்ற கழக ஆலோசனை கூட்டம்

வாசுதேவநல்லூரில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக ஆலோசனை கூட்டம் நடந்தது.

Update: 2022-12-28 18:45 GMT

வாசுதேவநல்லூர்:

வாசுதேவநல்லூர் தமிழக மக்கள் முன்னேற்ற கழக சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் டாக்டர் அம்பேத்கர் சிலை அருகே உள்ள கல்யாண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்திற்கு தென்காசி வடக்கு மாவட்ட தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். தென்காசி மாவட்ட மண்டல செயலாளர் ச.இன்பராஜ் முன்னிலை வகித்தார். தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் சி.மாடசாமி அனைவரையும் வரவேற்று பேசினார்.

சிறப்பு அழைப்பாளராக தேர்தல் பொறுப்பாளர்கள் மாநில துணை பொதுச்செயலாளர் ஜே.அருண் பிரின்ஸ், தென் தலைமை நிலைய செயலாளர் வி.சேகர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

கூட்டத்தில், தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் ஜான்பாண்டியன் வருகிற 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தென்காசி தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற அனைவரும் விரைந்து கட்சி பணியாற்ற வேண்டும். 50 ஆண்டு காலமாக கிடப்பில் போடப்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையின் மீது அமைந்துள்ள செண்பகவல்லி தடுப்பணையில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்ய வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், சிறுபான்மை அணி மாவட்ட தலைவர் செய்யது மக்தும், செயலாளர் மைதீன், மாவட்டத் துணைச்செயலாளர் காளிராஜ், ஒன்றிய செயலாளர்கள் கே.ராஜ்குமார் (வாசுதேவநல்லூர்), வேல்முருகன் (சங்கரன்கோவில் தெற்கு), சந்தன மாரியப்பன், (சங்கரன்கோவில் வடக்கு), இன்பராஜ் (குருவிகுளம ்வடக்கு, முத்துசாமி ஒன்றிய தலைவர் (குருவிகுளம் தெற்கு), புளியங்குடி நகர செயலாளர் தங்கச்சாமி பாண்டியன், நகர இணைச்செயலாளர் பிரசாந்த், வாசுதேவநல்லூர் ஒன்றிய தலைவர் மாடசாமி, ஒன்றிய இணைச் செயலாளர் கோபாலகிருஷ்ணன், சங்கரன்கோவில் ஒன்றிய தலைவர் விஸ்வநாதன் பட்டர், தொழிற்சங்க தலைவர் முத்துசாமி, தொழிற்சங்க செயலாளர் தங்கராஜ், மாவட்ட மகளிர் அணி செயலாளர் செந்தில் அரசி ஆகியோர் கலந்து கொண்டனர்.

முடிவில் வாசுதேவநல்லூர் தொகுதி இணை செயலாளர் கனி பாண்டியன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்