சமத்துவ மக்கள் கட்சி ஆலோசனை கூட்டம்

புளியங்குடியில் சமத்துவ மக்கள் கட்சி ஆலோசனை கூட்டம் நடந்தது.

Update: 2022-07-04 15:18 GMT

புளியங்குடி:

சமத்துவ மக்கள் கட்சி தென்காசி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் புளியங்குடியில் நடைபெற்றது. வடக்கு மாவட்ட செயலாளர் சின்னசாமி தலைமை தாங்கினார். அவைத்தலைவர் ஆனந்த் முன்னிலை வகித்தார். மாநில விவசாய அணி துணைச் செயலாளர் எட்வின் ஆலோசனை வழங்கி பேசினார்.

கூட்டத்தில், வருகிற 14-ந் தேதி கட்சி நிறுவன தலைவர் சரத்குமாரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தென்காசி வடக்கு மாவட்டத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கவும், பல்வேறு இடங்களில் கட்சி கொடி ஏற்றவும் முடிவு செய்யப்பட்டது.

இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் சவுந்தரராஜன், தென்காசி வடக்கு மாவட்ட துணை செயலாளர்கள் திருமலைசாமி, செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், புளியங்குடி நகர செயலாளர் எஸ்றா நன்றி கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்