ஆலோசனை கூட்டம்

கமுதி தாலுகாவில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-09-23 18:45 GMT

கமுதி, 

கமுதி தாலுகாவில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக வட்டாட்சியர் சேதுராமன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், தேவையான அளவுக்கு மணல் மூடைகளை தயார் படுத்தி வைக்கவும், ரேஷன் கடைகளில் அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை இருப்பு வைக்கவும், மின்வாரியத்தினர் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைத்தும், மின் கம்பங்கள், மின் வயர்கள் அறுந்து விழுந்தால், மின்சாரத்தை துண்டித்து உடனடியாக சம்பவ இடத்திற்கு செல்லவும், மருத்துவத் துறை அதிகாரிகள் நோய் பரவாமல் உரிய நடவடிக்கையில் எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

அதேபோல் பேரிடர் மேலாண்மை தீயணைப்பு துறை அதிகாரிகள் தீயணைப்பு வாகனங்களில் தண்ணீர் இருப்பு வைக்கவும், தரை பாலங்கள் உள்ள பாக்குவெட்டி, மண்டல மாணிக்கம், பேரையூர், செய்யாமங்களம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் சாலைகளை கடந்து செல்லும் போது உரிய உதவிகளை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், ஊரக வளர்ச்சித்துறை, தீயணைப்புத்துறை, நெடுஞ்சாலைத்துறை, உணவு பொருள் வழங்கல் அதிகாரிகள், சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, பேரூராட்சி அதிகாரிகள் உள்பட பல்வேறு அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்