குருப்பெயர்ச்சி விழா முன்னேற்பாடு பணி குறித்து ஆலோசனை

திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் 22-ந் தேதி நடக்கும் குருப்பெயர்ச்சி விழா முன்னேற்பாடு பணி குறித்து ஆலோசனை நடந்தது.

Update: 2023-04-18 19:39 GMT

தஞ்சையை அடுத்த திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா வருகிற 22-ந் தேதி(சனிக்கிழமை) நடைபெறுவதையொட்டி தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் குருப்பெயர்ச்சி விழா முன்னேற்பாடு பணி குறித்து தொடர்புடைய துறை அலுவலர்கள், தன்னார்வலர் அமைப்பு மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோருடன் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்றுமாலை நடந்தது. இதற்கு வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) பழனிவேல் தலைமை தாங்கினார்.கூட்டத்தில், குருப்பெயர்ச்சி விழாவுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள், குடிநீர்வசதி, கழிவறை வசதி, தூய்மை பணி, மருத்துவ வசதி, ஆம்புலன்ஸ் வசதி, முதலுதவி சிகிச்சை மையம், தடையில்லா மின்சாரம், சிறப்பு பஸ்கள் இயக்குதல், சாலை பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு வசதிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.இதில் வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு நித்யா, மாநகர்நல அலுவலர் சுபாஷ்காந்தி, தாசில்தார் சக்திவேல், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்