பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவது குறித்த ஆலோசனை

பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவது குறித்த ஆலோசனை நடந்தது.

Update: 2022-06-16 18:17 GMT

நொய்யல்,

கரூர் மாவட்டம், புகழிமலையில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கும்பாபிஷேகம் நடத்துவதற்கான பாலாயம் செய்து குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு புகழூர் நகர்மன்ற தலைவர் சேகர் என்கிற குணசேகரன் தலைமை தாங்கினார். நகர்மன்ற துணைத்தலைவர் பிரதாபன், கோவில் அறங்காவலர்கள், இந்து சமய அறநிலை துறை அலுவலர்கள் முன்னிைல வகித்தனர். கூட்டத்தில் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் நடத்துவதற்கு வருகிற 19-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) பாலாயம் செய்வது என முடிவு செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்