உயர் சிகிச்சை வசதிகள் ஏற்படுத்தப்படும்

ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் உயர் சிகிச்சை வசதிகள் ஏற்படுத்தப்படும்

Update: 2023-08-15 19:19 GMT

ராஜபாளையம்,

ராஜபாளையம் சேத்தூர் சேவக பாண்டிய அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தனுஷ் குமார் எம்.பி, தங்கப்பாண்டியன் எம். எல்.ஏ. ஆகியோர் தேசிய கொடியை ஏற்றினர். அப்போது தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. கூறுகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி ஓரிரு வாரங்களில் சைக்கிள் வழங்கப்படும். ராஜபாளையம் தொகுதியில் கடந்த ஆண்டு அரசு பள்ளிகளில் ஆண்டுவிழா நடத்தப்பட்டது.

அதேபோல இனிவரும் ஆண்டுகளில் அரசே தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் ஆண்டுவிழா நடத்த ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ராஜபாளையம் தொகுதி பொதுமக்கள் உயர்சிகிச்சைக்காக மதுரை, பாளையங்கோட்டை ஆஸ்பத்திரிக்கு செல்லாமல் ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் அனைத்து சிகிச்சையும் வழங்கப்படும். விழாவில் பேச்சுப்போட்டியில் கலந்து கொண்ட மாணவிகளுக்கு பரிசுகளை அவர் வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் அரசு மகப்பேறு மருத்துவமனை இணைந்து நடத்திய ரத்ததான முகாமை அவர் தொடங்கி வைத்தார். இதில் நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, நிர்வாகிகள், கவுன்சிலர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்