விநாயகர் சிலைகள் ஊர்வலம் குறித்த முன்னேற்பாடு கூட்டம்
விநாயகர் சிலைகள் ஊர்வலம் குறித்த முன்னேற்பாடு கூட்டம்
முத்துப்பேட்டை ஜாம்புவானோடை சிவன் கோவிலில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலைகள் ஊர்வலம் குறித்த முன்னேற்பாடு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு இந்து முன்னணி மாவட்ட செயலாளர் விக்னேஸ்வரன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் வருகிற செப்டம்பர் மாதம் 24-ந்தேதி விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடத்துவது. ஊர்வலத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை அல்லது மத்திய மந்திரி முருகன் ஆகிய இருவரில் ஒருவரை அழைப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், பா.ஜ.க. திருவாரூர் மாவட்ட மேலிட பார்வையாளர் பேட்டை சிவா, கோட்டூர் ராகவன், பா.ஜ.க. ஒன்றிய தலைவர் அன்பழகன் மற்றும் இந்து முன்னணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.