கொடுஞ்செயல் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் கொடுஞ்செயல் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
வாணியம்பாடி அரசு மருத்துவ மனையில் முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் மற்றும் தேசிய குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மருத்துவ அலுவலர் (பொறுப்பு) சிவசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். டாக்டர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். டாக்டர்கள், நர்சுகள் உறுதி மொழி ஏற்றனர்.