முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு

நாகையில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

Update: 2022-06-15 18:06 GMT

நாகப்பட்டினம்:

நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர், மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் ஷாகிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முதியோர்களை குடும்பத்தில் நல்லமுறையில் அரவணைப்போடு பராமரித்திட வேண்டும். அவர்களை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் காயப்படுத்தக் கூடாது. தகாத வார்த்தைகளால் திட்ட கூடாது. முதியோர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். பொது இடங்களான ஆஸ்பத்திரி, வங்கி, பஸ் நிலையம் போன்ற இடங்களில் முதியோர்களுக்கு முன்னுரிமை அளித்து அவர்களுக்கு எதிரான கொடுஞ்செயல்கள், வன்முறைகள் எவ்விதத்திலும் இழைக்கப்படுவதனை தடுத்திட வேண்டும் என கலெக்டர் உறுதிமொழி வாசிக்க அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் திரும்ப சொல்லி உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். தொடர்ந்து முதியோர்களின் பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகப் பதாகை வெளியிடப்பட்டது. இதில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர் தமீமுன்னிசா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தனபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்