வாலிபர் உடல் உறுப்புகள் தானம்
விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் பெருவளூர், புதிய காலனி பகுதியை சேர்ந்தவர் லீலாவினோதன் (வயது 23). விவசாயி. இவர் கடந்த மாதம் 28-ந் தேதி மோட்டார்சைக்கிளில் சென்றபோது எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் சிக்கினார். அதில் அவர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவரை சிகிச்சைக்காக வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சையில் இருந்த அவர் மூளைச்சாவு அடைந்தார். இதை டாக்டர்கள் குழுவினர் உறுதி செய்தனர்.
அதைத்தொடர்ந்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன் வந்தனர். அதன்படி அவரது கல்லீரல், சிறுநீரகங்கள் தனமாக பெறப்பட்டது.
கல்லீரல் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் வேலூர் நாராயணி மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் சென்னை சிம்ஸ் மருத்துவமனைக்கும் தானமாக அளிக்கப்பட்டது.