திருமணம் செய்து வைக்காத ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை

திருமணம் செய்து வைக்காத ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை

Update: 2022-06-23 10:25 GMT

வெள்ளகோவில்

வெள்ளகோவில் அருகே திருமணம் செய்து வைக்காத ஏக்கத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வாலிபர்

வெள்ளகோவில் அருகே உள்ள செம்மாண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவருடைய மகன் விஜய் (வயது 22). குடும்ப சூழ்நிலை காரணமாக கட்டிட வேலைக்கு சென்று வந்தார். இவர் தனது பெற்றோரிடம் திருமணம் செய்து செய்துவைக்க வலியுறுத்தி வந்தார். இதற்காக பெற்றோரிடம் சண்டை போட்டார். அப்போது வீட்டை வட்டு வெளிேய செல்பவர் சில நாட்கள் கழித்து மீண்டும் வீட்டிற்கு வருவார்.

அதன்படி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு விஜய் சண்டை போட்டுக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் சேமலைகவுண்டன்வலசு என்ற இடத்தில் வேப்பமரத்தில் வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்குவதாகவும், அவர் இறந்து பல நாட்கள் ஆனதால் கயிறு அறுந்து உடல் கீழே விழுந்து தூர்நாற்றம் வீசுவதாக வெள்ளகோவில் போலீசாருக்கு தகவல் தெரியவந்தது.உடனே போலீசார் விரைந்து சென்று அந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தற்கொலை செய்து கொண்டவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என போலீசார் விசாரித்தனர்.

விசாரணை

மேலும் இறந்து கிடந்தவரின் சட்டை பையில் இருந்த செல்போன், டிரைவிங் லைசென்சு ஆகியவற்றை எடுத்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர் காணாமல் போன விஜய் என தெரியவந்தது. இது குறித்து வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி, சப் இன்ஸ்பெக்டர் கே. முத்துக்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணம் செய்து வைக்காத ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்