மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை
மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
அச்சன்புதூர்:
அச்சன்புதூர் அருகே பண்பொழி திருமலைக்கோவில் சாலை பேட்டை தெருவைச் சேர்ந்த மாடசாமி மகன் கருப்பசாமி வயது (வயது 19). கட்டிட தொழிலாளியான இவருக்கு தீராத வயிற்றுவலி இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று பண்பொழி பெரியகுளம் அருகே உள்ள கோவில் வளாகத்தில் கருப்பசாமி மதுவில் விஷம் கலந்து குடித்துவிட்டு மயங்கிய நிலையில் கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், கருப்பசாமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அச்சன்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.