அ.தி.மு.க. மாநாட்டு ஜோதிக்கு வரவேற்பு
உளுந்தூர்பேட்டையில் அ.தி.மு.க. மாநாட்டு ஜோதிக்கு மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
திருவெண்ணெய்நல்லூர்
தொடர் ஜோதி ஓட்டம்
மதுரையில் நடைபெற உள்ள அ.தி.மு.க. மாநாட்டையொட்டி சென்னையில் இருந்து மதுரைக்கு தொடர் ஜோதி ஓட்டத்தை கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த 14-ந் தேதி தொடங்கி வைத்தார். மொத்தம் 50 பேர் இடம் பெற்றுள்ள இந்த ஜோதி ஓட்ட குழுவானது 6 நாள் பயணத்துக்கு பிறகு வருகிற 20-ந் தேதி காலை மதுரையை சென்றடைகிறது.
இந்த நிலையில் ஜோதி ஓட்ட குழு நேற்று கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை அரசு போக்குவரத்துக கழக பணிமனை அருகில் வந்தபோது மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் இரா.குமரகுரு தலைமையில் ஜோதி ஓட்ட குழுவினருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
11 ஆயிரம் பேர்
பின்னர் அங்கிருந்து ஜோதியை கையில் ஏந்தியபடி குமரகுரு அ.தி.மு.க.வினருடன் கோஷம் எழுப்பியபடி பஸ்நிலையம் வரை ஊர்வலமாக புறப்பட்டு சென்றார். பின்னர் அவர் ஜோதி ஓட்ட குழுவினரை அங்கிருந்து வழியனுப்பி வைத்தார். தொடர்ந்து அவர் பேசும்போது, வருகிற 20-ந் தேதி மதுரையில் நடைபெறும் அ.தி.மு.க. வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் 11 ஆயிரம் பேர் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
இதில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் மணிராஜ், செண்பகவேல், சந்திரன், மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் கிருஷ்ணன், நகர செயலாளர் துரை, நகர துணை செயலாளர் கோபால், ஒன்றியக்குழு முன்னாள் துணை தலைவர் சாய்ராம், மாவட்ட அவைத்தலைவர் ராமசாமி, கவுன்சிலர் முருகன், களமருதூர் ஆனந்தன், ஒன்றிய நிர்வாகி எழில், கருவேப்பிலைப்பாளையம் கிளை செயலாளர் அய்யப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.