அ.தி.மு.க. நிர்வாகியின் மொபட்டை பறித்தவர் கைது

நெல்லையில் அ.தி.மு.க. நிர்வாகியின் மொபட்டை பறித்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-04-21 21:09 GMT

நெல்லை டவுன் காந்திமதி தெருவைச் சேர்ந்தவர் அப்துல் சமது. அ.தி.மு.க. நிர்வாகியான இவர் நேற்று முன்தினம் தனது மொபட்டில் சென்றபோது, அவரை மர்மநபர் வழிமறித்து மொபட்டை பறித்து சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், பாளையங்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அஸ்மி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், பாளையங்கோட்டை குலவணிகர்புரத்தை சேர்ந்த சண்முகசுந்தரம் மகன் கந்தசாமி (வயது 33) என்பவர் தனக்கு தரவேண்டிய பணத்திற்காக அப்துல் சமதுவின் மொபட்டை பறித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து கந்தசாமியை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்