ஆற்றங்கரை பள்ளிவாசலில் அ.தி.மு.க.வினர் சிறப்பு பிரார்த்தனை
ஆற்றங்கரை பள்ளிவாசலில் அ.தி.மு.க.வினர் சிறப்பு பிரார்த்தனை நடத்தினர்.
திசையன்விளை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்-அமைச்சராக பதவி ஏற்கவும், அவருக்கு நீண்ட ஆயுள் வேண்டியும், திசையன்விளை அருகே உள்ள ஆத்தங்கரை பள்ளிவாசலில் அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் நேற்று மலர் போர்வை போர்த்தி பிரார்த்தனை செய்தார்.
முன்னாள் எம்.பி. சவுந்தர்ராஜன், ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் அந்தோணி அமலராஜா, கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.பி.கே.செல்வராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தமிழ்மகன் உசேனுக்கு அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.