ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை அ.தி.மு.க.வினர் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும்: எஸ்.பி.சண்முகநாதன்

ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை அ.தி.மு.க.வினர் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் என்று மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2023-02-22 18:45 GMT

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா 75-வது பிறந்தநாள் விழா நாளை (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. விழாவை முன்னிட்டு காலை 9 மணிக்கு தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள தெற்கு மாவட்ட அ.தி.மு.க. அலுலகம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்ட ஜெயலலிதா உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. தொடர்ந்து பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்படுகிறது.

விழாவில் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூராட்சி, வட்ட, கிளை கழக நிர்வாகிகள் மாவட்ட சார்பு அணிகளின் பொறுப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கூட்டுறவு அமைப்பு பிரதிநிதிகள் கழக தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும், தூத்துக்குடி தெற்கு மாவட்டம் முழுவதும் உள்ள ஒன்றிய, நகர, மாநகரப்பகுதி, பேரூராட்சி, வட்ட, கிளைக் கழகங்களில் நிர்வாகிகள் அவரவர் பகுதிகளில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளை கொண்டாடும் விதமாக அவரது உருவப்படத்தை அலங்கரித்து மரியாதை செலுத்தியும், நலத்திட்ட உதவிகள், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடுமாறு கேட்டுக் கொள்கிறேன், என அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்