அ.தி.மு.க. ஆட்சியை காப்பாற்றிய "பா.ஜனதாவுக்கு எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்து விட்டார்": தூத்துக்குடியில் டி.டி.வி.தினகரன் பேட்டி

“அ.தி.மு.க. ஆட்சியை காப்பாற்றிய பா.ஜனதாவுக்கு எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்துவிட்டார்” என்று அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறினார்.

Update: 2023-10-25 18:45 GMT

"அ.தி.மு.க. ஆட்சியை காப்பாற்றிய பா.ஜனதாவுக்கு எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்துவிட்டார்" என்று அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறினார்.

டி.டி.வி. தினகரன் பேட்டி

தூத்துக்குடியில் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று காலை வந்தார். அப்போது, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. கூட்டணி குறித்து உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும். மக்களை ஏமாற்றுவதுதான் இந்த தி.மு.க. ஆட்சியின் செயல்பாடாக உள்ளது. அ.தி.மு.க.வில் உள்ள சிலீப்பர்செல்கள் தேவையான நேரத்தில் வெளியில் வருவார்கள்.

அ.ம.மு.க., அ.தி.மு.க.வுடன் இணைய வாய்ப்பே கிடையாது. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அவர்களை ஏற்றுக் கொள்வது மக்கள் கையில்தான் உள்ளது.

துரோகம்

எடப்பாடி பழனிசாமி பா.ஜனதாவால் எல்லா பலனையும் அடைந்து விட்டு, தேர்தல் நேரத்தில் பா.ஜனதாவுக்கு துரோகம் செய்து உள்ளார். துரோகம்தான் அவருடைய ஒரே குறிக்கோள். அவருடைய இயற்கையான சுபாவமே துரோகம் செய்வது தான். அவரை முதல்-அமைச்சர் ஆக்கியவர்களுக்கு, ஆட்சி தொடருவதற்கு காரணமாக இருந்தவர்களுக்கு எல்லாம் துரோகம் செய்து உள்ளார். அ.தி.மு.க. ஆட்சியை காப்பாற்றி கொடுத்த பா.ஜனதாவுக்கு தற்போது துரோகம் செய்துவிட்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்