ஊட்டியில் அ.தி.மு.க.வினர் சாலை மறியல்
ஊட்டியில் அ.தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊட்டி,
ஊட்டி ஏ.டி.சி. திடல் பகுதியில் அ.தி.மு.க. சார்பில், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் சில நிர்வாகிகள் பேசினர். தொடர்ந்து நீலகிரி மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் பேச தொடங்கிய போது, திடீரென மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது. ½ மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் வினியோகிக்கப்பட வில்லை. இதை கண்டித்து அ.தி.மு.க.வினர் எட்டின்ஸ் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.