அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

ஆற்காடு, சோளிங்கர், வாலாஜா, அரக்கோணத்தில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-03-13 18:17 GMT

ஆர்ப்பாட்டம்

தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை கண்டித்து ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த முப்பது வெட்டி பகுதியில் ஆற்காடு கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் எஸ்.அன்பழகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அவைத் தலைவர், ஒன்றிய நிர்வாகிகள், அணி நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றியக் குழு உறுப்பினர்கள், கிளை செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

சோளிங்கர்

சோளிங்கர் பஸ் நிலையத்தில் கிழக்கு ஒன்றியம் மற்றும் நகர அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கிழக்கு ஒன்றிய செயலாளர் விஜயன், நகர செயலாளர் ராமு முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்.எல்.ஏ. ஜி.சம்பத் தலைமை தாங்கினார்.

ஒன்றிய, நகர, நிர்வாகிகள், பால் கூட்டுறவு சங்கத் தலைவர் தட்சிணாமூர்த்தி, பேரவை செயலாளர் நரசிம்மன், எம்.வேலு, நகராட்சி உறுப்பினர் மணிகண்டன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் ஏ.எல்.சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

வாலாஜா

வாலாஜா பஸ் நிலையம் அருகே அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வாலாஜா நகர செயலாளர் டபிள்யு.ஜி.மோகன், ஒன்றிய செயலாளர் வி.கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் சுமைதாங்கி சி.ஏழுமலை கண்டன உரையாற்றினார்.

வாலாஜா நகரம் மற்றும் வாலாஜா கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

அரக்கோணம்

அரக்கோணம் பழைய பஸ் நிலையம் அருகே அ.தி.மு.க. நகர செயலாளர் பாண்டுரங்கன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதில் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்