அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

ஆண்டிப்பட்டியில் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-12-14 19:00 GMT

சொத்துவரி, பால் மற்றும் மின்சார கட்டண உயர்வை கண்டித்தும், ஆண்டிப்பட்டி ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள விடாமல் தி.மு.க.வினர் இடையூறு செய்வதை கண்டித்தும் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஆண்டிப்பட்டியில் நேற்று நடந்தது. இதற்கு ஆண்டிப்பட்டி ஒன்றியக்குழு தலைவரும், அ.தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளருமான ஏ.லோகிராஜன் தலைமை தாங்கினார். அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் எஸ்.டி.கே.ஜக்கையன், ஆண்டிப்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் டி.ஆர்.என்.வரதராஜன், மாவட்ட துணை செயலாளர் முருக்கோடை ராமர், ஆண்டிப்பட்டி நகர செயலாளர் அருண்மதி கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. வசம் உள்ள ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகளை செய்யவிடாமல் முட்டுக்கட்டை போடும் தி.மு.க.வினரை கண்டித்தும், விலைவாசி உயர்வுக்கு காரணமான தி.மு.க. அரசை கண்டித்தும் கோஷமிட்டனர். இதில் அ.தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்