அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
தி.மு.க. அரசை கண்டித்து தேனி உள்பட 6 நகராட்சி பகுதிகளில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
தேனி உள்பட மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சி பகுதிகளிலும் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. தேனி பழைய பஸ் நிலையம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு நகர செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார். இதில் அமைப்புச் செயலாளர் ஜக்கையன் கலந்துகொண்டு தி.மு.க. அரசின் சொத்து வரி உயர்வு, மின்கட்டண உணர்வை கண்டித்தும், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பாதிப்பு குறித்தும் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தின் போது, மின் கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு, குடிநீர் வரி உயர்வு, விலைவாசி உயர்வு ஆகியவற்றை கண்டித்தும், தி.மு.க. அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
இதில், முன்னாள் எம்.பி. பார்த்திபன், மாவட்ட துணைச் செயலாளர் முருக்கோடை ராமர், பழனிசெட்டிபட்டி பேரூர் செயலாளர் தீபன் சக்கரவர்த்தி, வடபுதுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் அன்னபிரகாஷ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு, தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். அதுபோல் மாவட்டத்தில் மற்ற நகராட்சி பகுதிகளில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திலும் அமைப்புச் செயலாளர் ஜக்கையன் கலந்து கொண்டு பேசினார்.
கூடலூர்
இதேபோல் கூடலூர் நகர அ.தி.மு.க. சார்பில் பழைய பஸ்நிலையம் அருகே நகர செயலாளர் அருண்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. துணை செயலாளர் பாலைராஜா முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் சொத்துவரி, மின்கட்டணம், ஆவின் பால் உயர்வு குறித்து தி.மு.க. அரசை கண்டித்து கோஷமிட்டனர். இதில் அ.தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.