அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னையில் எடப்பாடி பழனிசாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து நாகை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-10-19 19:03 GMT

சென்னையில் தி.மு.க அரசை கண்டித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதை கண்டித்து, நாகை தாசில்தார் அலுவலகம் முன்பு அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார். நகர செயலாளர் தங்க.கதிரவன், நகர அவைத்தலைவர் அறிவழகன், நகராட்சி கவுன்சிலர்கள் கவிதா கிருஷ்ணமூர்த்தி, தமயந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

சிக்கல்-திட்டச்சேரி

இதேேபால, கீழ்வேளூர் கச்சனம் சாலை சந்திப்பில் கீழ்வேளூர் வடக்கு ஒன்றிய செயலாளர் சிவா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நகர செயலாளர் முரளி, ஒன்றிய நிர்வாகிகள் காத்தமுத்து, அசோகன், கிருஷ்ணமூர்த்தி, துரை பாஸ்கரன், ரவிக்குமார் மற்றும் ஒன்றிய, நகர, கிளை கழக, சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

திருமருகல் மெயின்ரோடு அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகில் கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆசைமணி தலைமையிலும், திருமருகல் வடக்கு ஒன்றிய செயலாளர் ராதாகிருட்டிணன், திருமருகல் தெற்கு ஒன்றிய செயலாளர் பக்கிரிசாமி முன்னிலையிலும் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில்

மாவட்ட துணைச் செயலாளர் அபுசாலிஹ், திட்டச்சேரி நகர செயலாளர் அப்துல் பாசித், திருமருகல் வடக்கு ஒன்றிய துணைச் செயலாளர் திருமேனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வாய்மேடு

தலைஞாயிறு கடைத்தெருவில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலை ஞாயிறு மேற்கு ஒன்றிய செயலாளர் சவுரிராஜன் தலைமை தாங்கினார். பேரூர் செயலாளர் பிச்சையன், மாவட்ட மகளிரணி செயலாளர் இளவரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், பேரூர் நிர்வாகிகள் ராஜேந்திரன், கமல் ராம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்