அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்

Update: 2022-10-19 18:48 GMT

சென்னையில், முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கைது ெசய்யப்பட்டதை கண்டித்து வேதாரண்யம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு அ.தி.மு.க.வினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு வேதாரண்யம் நகர செயலாளர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு துணைத்தலைவர் அறிவழகன் முன்னிலை வகித்தார். இதில், நகர துணை செயலாளர்|சுரேஷ்பாபு, நகர பொருளாளர் குமாரபாரதி, முன்னாள் நகர செயலாளர் ஜெகநாதன், கட்சி பொறுப்பாளர்கள் வீரமணி, குமார், ராஜகிளி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்