தூத்துக்குடியில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-03-13 18:45 GMT

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ததை கண்டித்து நேற்று தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் தூத்துக்குடியில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் எடப்பாடி பழனிசாமி மீது மதுரையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதனை கண்டித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவை சார்பில் சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமை தாங்கி பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் என்.சின்னத்துரை, மாநில அமைப்பு சாரா ஓட்டுநரணி இணைச்செயலாளர் பெருமாள்சாமி, மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் வீரபாகு, கொறடா மந்திரமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆத்தூர்

ஆத்தூர் நகர பஞ்சாயத்து கலையரங்கம் முன்பு திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆழ்வார்திருநகரி கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் கே. விஜயகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் அமலி ராஜன், ஒன்றிய செயலாளர்கள் ராமச்சந்திரன், ராஜநாராயணன், மாவட்ட மீனவரணி செயலாளர் டார்ஸன், நகர செயலாளர்கள் காயல் மவுலானா, ரவிச்சந்திரன், மகேந்திரன், செந்தில் ராஜ்குமார் உட்பட பலர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதன், மாநில கழக பேச்சாளர் நாஞ்சில் மகாதேவன், அமைப்பு செயலாளர் என்.சின்னத்துரை, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன், ஆத்தூர் நகர பஞ்சாயத்து கவுன்சிலர் சிவாஉட்பட பலர் பேசினா். கூட்டத்தில் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. ஆத்தூர் நகர செயலாளர் எம். பி.சோமசுந்தரம் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்